கும்பம் - வார பலன்கள்
எழுத்தாற்றல் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
சனிக்கிழமை முதல் திங்கள் மாலை 3.55 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் கவனம் தேவை. பெரிய முயற்சியால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தடைபட்ட காரியங்களின் வெற்றி பெற தகுந்த நபர்களின் உதவியை நாடுவீர்கள். வரவேண்டிய இனங்கள் தக்க நேரத்தில் வந்துசேரும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம்.
உத்தியோகத்தில் அதிகப் பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த கடன் தள்ளிப் போகலாம். சொந்தத்தொழிலில் புதிய வாடிக்கையாளர் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் வழக்கமான லாபம் குறையாது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கலாம். அவற்றை பெண்களே சாமர்த்தியமாக சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள், பிரபல நிறுவனங்களின் ஒப்பந்தங்களுக்கு முயற்சிப்பார்கள். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றுங்கள்.