தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளா மாநிலத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது

Update: 2024-08-13 04:21 GMT

புதுடெல்லி,

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்க்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், மாஹே ஆகிய பகுதிகளிலும் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளா மாநிலத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, எர்ணாகுளம், கண்ணூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்