5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது.;
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறு, மெரினா, பட்டினம்பாக்கம், தரமணி மற்றும் சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று மழை பெய்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.