டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் மிரட்டல் பந்துவீச்சு..107 ரன்களை இலக்காக நிர்ணயித்த கனடா

கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.

Update: 2024-06-11 16:20 GMT

நியூயார்க்,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூயார்க்கில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கனடா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்ஸ் , நவநீத் தலிவால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் நவநீத் தலிவால் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த பர்கத் சிங் 2 ரன்களும் , நிக்கோலஸ் கிர்டன் 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் ஆரோன் ஜான்ஸ் சிறப்பாக விளையாடினார். நிலைத்து ஆடி ரன்கள் குவித்த அவர் அரைசதமடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் அமீர் , ஹரிப் ரவுப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 107 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்