இந்தியாவில் பிடித்த மைதானம் எது..? - தென் ஆப்பிரிக்க வீரர் பதில்

இந்தியாவில் உள்ள பல மைதானங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மைதானம் எது? என்று ஷம்சியிடம் ரசிகர் ஒருவர் கேட்டார்.

Update: 2024-09-07 15:12 GMT

image courtesy: AFP

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தப்ரைச்ஸ் ஷம்சியிடம், இந்தியாவில் உள்ள பல மைதானங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மைதானம் எது? என்று ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் தமக்கு பிடித்த மைதானம் என்று அவர் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "சென்னை. அங்குள்ள ரசிகர்கள் உண்மையில் அறிவாளிகள் மற்றும் விளையாட்டின்போது இரு அணியினரின் நல்ல ஆட்டங்களை பார்த்து யார் நன்றாக விளையாடினாலும் அவர்களை பாராட்டுகிறார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்