பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-04 17:52 GMT

Image Courtesy: @ICC

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹென்ரிச் கிளாசென் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம்; ஹென்ரிச் கிளாசென் (கேப்டவுன்), ஆட்னீல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா, டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, நகாபா பீட்டர், ரியான் ரிக்கெல்டன், டப்ரைஸ் ஷம்சி, ஆண்டைல் சிம்லெனே, ரஸி வான் டெட் டுசென்.



Tags:    

மேலும் செய்திகள்