3வது டி20 - ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்
2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது .;
புலவாயோ,
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது .இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி புலவாயோவில் நேற்று நடைபெற்றது. இதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது .
இந்த நிலையில், ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்குகிறது . இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற பாகிஸ்தான் தீவிரம் காட்டும் . அதேவேளை ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் ஜிம்பாப்வே அணி விளையாடும்.