ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி20: விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்
இந்த அணிக்கு சல்மான் அலி ஆகா கேப்டனாகவும், உஸ்மான் கான் விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளனர்.
புலவாயோ,
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது .இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.இதன் மூலம் 2-0 என டி20 தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது . இந்த நிலையில், ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.
இதையடுத்து இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை (பிளேயிங் லெவன்) பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆகா கேப்டனாகவும், உஸ்மான் கான் விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளனர்.
பாகிஸ்தான் அணி விவரம்: உமைர் பின் யூசுப், சாஹிப்சாதா பர்ஹான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா (கேப்டன்), தயாப் தாஹிர், காசிம் அக்ரம், அராபத் மின்ஹாஸ், ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அப்ரிதி, முகமது ஹஸ்னைன், சுப்யான் மோகிம்.