இந்தியா-ஆஸ்திரேலியா பாக்சிங் டே டெஸ்ட்; முதல் நாள் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.;

Update:2024-12-10 18:08 IST

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.

அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

இதனை தொடர்ந்து 4-வது டெஸ்ட் போட்டி மெர்ல்போனில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி பாக்சிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. பொதுவாகவே, டிசம்பர் 26-ம் தேதி துவங்கும் டெஸ்ட்களை பாக்சிங் டே டெஸ்ட் என அழைப்பார்கள்.

கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் துவங்கும் போட்டிகளை பாக்சிங் டே போட்டி என ஒவ்வொரு ஆண்டும் விளையாடப்படுகிறது. இதனால் இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள். இந்நிலையில் 4-வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மெர்போர்ன் மைதானம் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்ககூடிய மிக பெரிய ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்