கேப்டன்ஷிப் பதவி: விராட் கோலி- கே.எல். ராகுல் போட்டியா? உத்தப்பா பகிர்ந்த பரபரப்பு தகவல்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஒரு சீனியர் வீரர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட விரும்பியதாக செய்தி வெளியானது.;

Update:2025-01-10 21:58 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.

முன்னதாக அந்தத் தொடரில் ரோகித் இல்லாதபோது ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஒரு சீனியர் வீரர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட விரும்பியதாக செய்தி வெளியானது.

அந்த சூழலில் இந்திய அணிக்குள் கேப்டன்ஷிப் சம்பந்தமாக போட்டி இருப்பது உண்மையாக தெரிவதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் 2006 தென் ஆப்பிரிக்க அணியை போல தற்போதைய இந்திய அணியில் நெருப்பில்லாமல் புகையாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அந்த சீனியர் வீரர் விராட் கோலி அல்லது கே.எல். ராகுலாக இருக்கலாம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பரபரப்பான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஏதாவது நடந்தால் அதை நான் நேரடியாக சொல்லக் கூடிய நபர். அணிக்குள் தனி நபர்கள் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தனி நபர்கள் பற்றி நான் பேச மாட்டேன். ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியே மனநிலை மற்றும் வழி இருக்கும்.

எனவே அவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் சுமாராக விளையாடினால் நான் உத்வேகத்துக்கு தேவையான மெசேஜ் கொடுப்பேன். அதைத் தவிர்த்து எதுவும் பேசமாட்டேன்.

ஆனால் அந்த சீனியர் வீரர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதை மக்கள் யூகமாக தெரிவிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை அது கே.எல். ராகுல், அல்லது விராட் கோலியாக இருக்கலாம். ராகுலும் 8 - 9 வருடங்களாக இருப்பதால் சீனியராக கருதலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்