மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கேபி லீவிஸ் 92 ரன்கள் அடித்தார்.;
ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் கேப்டன் கேபி லீவிஸ் - லியா பால் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். லியா பால் 59 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேபி லீவிஸ் சதத்தை நெருங்கிய தருவாயில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்க உள்ளது.