இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்..? அஸ்வின் விளக்கம்

இந்திய முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீபத்தில் ஓய்வு அறிவித்தார்.;

Update:2025-01-10 19:19 IST

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

இந்த தொடரின் 3-வது போட்டி முடிந்ததும் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

இந்நிலையில் தனது கெரியர் முழுவதும் தான் இந்திய அணியின் கேப்டனாக செயல்படாதது ஏன்? என்பது குறித்து விளக்கத்தை தற்போது அஸ்வின் வெளிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகாததற்கு நான் படித்த இன்ஜினியரிங்தான் காரணம். ஏனெனில் உன்னால் முடியாது என்று யாரேனும் சொன்னால் நான் நிச்சயம் அதனை நோக்கி ஓடி சாதித்து காட்டுவேன். ஆனால் உன்னால் முடியும் என்று சொல்லிவிட்டால் தூங்கி விடுவேன். அதுபோல தான் நிறைய பேர் என்னை, 'நீ இந்திய அணியின் கேப்டனாக தகுதியானவன்' என்று ஆதரவு கொடுத்தார்கள். இப்படி என்னால் இந்திய அணியின் கேப்டனாக முடியும் என்று பலரும் சொன்னதாலேயே நான் தூங்கிவிட்டேன்" என கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்