டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.

Update: 2024-06-25 03:06 GMT

செயின்ட் லூசியா,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 7 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறி அசத்தியுள்ளது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் அடித்த சிக்சர்களையும் சேர்த்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிக்சர் எண்ணிக்கை 203-ஆக (157 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்