பெர்த் டெஸ்ட்; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது;
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோற்றதில்லை என்ற சிறப்புடன் களம் இறங்குகிறது.
இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுக வீரராக களம் இறங்குகிறார்.
மேலும், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார்.