முதல் டெஸ்ட்; இந்திய அணி தடுமாற்றம்
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.;
சென்னை,
ஷாண்டோ தலைமையிலான வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 6 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த சுப்மன் கில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி 6ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிற்து.