சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானில் இருந்து முதல் பெண் நடுவர்

இவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.;

Update:2024-09-15 20:23 IST

image courtesy: twitter/@TheRealPCB

கராச்சி,

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் முதல் பெண் நடுவராக சலீமா இம்தியாஸ் தேர்வாகியுள்ளார். இவர் இனிவரும் காலங்களில் சர்வதேச மகளிர் இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. தொடர்களில் நடுவராக செயல்படலாம்.

பாகிஸ்தானிலிருந்து முதல் பெண் நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சலீமா இம்தியாசுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்