சாம்பியன்ஸ் டிராபி தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-01-13 14:08 IST

image courtesy: ICC

கேப்டவுன்,

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்காவும் தங்களது அணியை அறிவித்துள்ளது.

பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

பவுமா (கேப்டன்), டோனி டி சார்சி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ரபடா, ரையன் ரிக்கெல்டான், ஷம்சி, ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்

Tags:    

மேலும் செய்திகள்