ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2025-01-12 23:04 IST

சண்டிகர்,

2025ம் ஆண்டுக்கான 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2வது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார். தற்போது அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்