சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-01-12 20:21 IST

காபூல்,

8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க ஐ.சி.சி. விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி இந்த தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

அதன்படி இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான இப்ராஹிம் சத்ரான் நீண்ட நாட்கள் கழித்து இடம் பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம்.கசன்பர், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, பரித் மாலிக், நவீத் சத்ரான்.

ரிசர்வ் வீரர்கள்: தர்வீஷ் ரசூலி, நங்யால் கரோட்டி, பிலால் சமி

Tags:    

மேலும் செய்திகள்