உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு சி.எஸ்.கே ஜெர்ஸியை வழங்கிய அஸ்வின்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது.;

Update:2025-03-21 17:53 IST
உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு சி.எஸ்.கே ஜெர்ஸியை வழங்கிய அஸ்வின்

Image Courtesy: @ChennaiIPL

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, உலக செஸ் சாம்பியன் குகேஷ் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது குகேஷுடன் இணைந்து அஸ்வின் செஸ் விளையாடினார். மேலும், குகேஷ் பெயர் பதித்த சி.எஸ்.கே ஜெர்சியை அஸ்வின் அவருக்கு வழங்கினார். இது தொடர்பான வீடியோவை சி.எஸ்.கே நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்