இஷான் கிஷன் அதிரடி சதம்...ஐதராபாத் அணி 286 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 286 ரன்கள் எடுத்தது.;

Update:2025-03-23 17:32 IST
இஷான் கிஷன் அதிரடி சதம்...ஐதராபாத் அணி 286 ரன்கள் குவிப்பு

ஐதராபாத்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினர் . அபிஷேக் சர்மா 24 ரன்களில் வெளியேறினார் . பின்னர் வந்த இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார் .ஹெட் , இஷான் கிஷன்  இருவரும் இணைந்து பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடி காட்டிய ஹெட் அரைசதமடித்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய நிதிஸ் குமார் ரெட்டி 30 ரன்களில் வெளியேறினார் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன் அதிரடி காட்டினார். அவர் 34 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஐதராபாத் அணி 286 ரன்கள் எடுத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்