ஐ.பி.எல்.: 5 லீக் ஆட்டங்கள் நிறைவு.. புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் விளையாடி விட்டன.;

Update:2025-03-26 04:30 IST
ஐ.பி.எல்.: 5 லீக் ஆட்டங்கள் நிறைவு.. புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

மும்பை,

கடந்த 22-ம் தேதி தொடங்கிய 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதன்படி அனைத்து அணிகளும் தங்களும் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடி விட்டன.

இதன் முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..!

இதில் ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், சென்னை மற்றும் டெல்லி அணிகள் தங்களது முதல் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் ஐதராபாத் முதலிடத்திலும், பெங்களூரு 2-வது இடத்திலும், பஞ்சாப் 3-வது இடத்திலும், சென்னை 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் உள்ளன.

தங்களது முதல் ஆட்டங்களில் லக்னோ, மும்பை, குஜராத், கொல்கத்தா மற்றும் ராஜ்ஸ்தான் அணிகள் தோல்வியடைந்துள்ளன. அதன் முடிவில் லக்னோ 6-வது இடத்திலும், மும்பை 7-வது இடத்திலும், குஜராத் 8-வது இடத்திலும், கொல்கத்தா 9-வது இடத்திலும் மற்றும் ராஜஸ்தான் 10-வது இடத்திலும் உள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்