நியூசிலாந்து - பாகிஸ்தான் டி20 தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.

டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.;

Update:2025-03-27 14:29 IST
நியூசிலாந்து - பாகிஸ்தான் டி20 தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.

image courtesy: ICC

துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நேற்றுடன் நிறைவடைந்த இந்த தொடரை நியூசிலாந்து 4-1 என்ற கனக்கில் கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், அபிஷேக் சர்மா 2-வது இடத்திலும், பில் சால்ட் 3-வது இடத்திலும், திலக் வர்மா 4-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 5-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அகீல் ஹொசைன் முதலிடத்திலும், வருண் சக்ரவர்த்தி 2-வது இடத்திலும், அடில் ரஷீத் 3-வது இடத்திலும், ஹசரங்கா 4-வது இடத்திலும், ஆடம் ஜம்பா 5-வது இடத்திலும் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக நியூசிலாந்தின் ஜேக்கப் டபி 7 இடங்கள் முன்னேறி ஆடம் ஜம்பாவுடன் 5-வது இடத்தை பகிர்ந்துள்ளார். ரவி பிஸ்னோய் ஒரு இடம் சரிந்து 7-வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 10-வது இடத்திலும் உள்ளனர். (ஒரு இடம் சரிவு)

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். அவருக்கு அடுத்து தீபேந்திர சிங் ஐரி 2-வது இடத்தில் உள்ளார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக நியூசிலாந்தின் மிக்கேல் பிரேஸ்வெல் 12 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்