ஐபிஎல் : ஐதராபாத் - லக்னோ அணிகள் இன்று மோதல்

7-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.;

Update:2025-03-27 06:42 IST
ஐபிஎல் : ஐதராபாத் -  லக்னோ அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், .

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சந்திக்கிறது.

ஐதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்