சென்னைக்கு எதிரான ஆட்டம்... டக் அவுட் ஆனார் ரோகித் சர்மா
சென்னை அணிக்காக முதல் ஓவரை கலீல் அகமது வீசினார்.;

Image Courtesy: @IPL / X (Twitter)
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் 3வது லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து மும்பையின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் களம் இறங்கினர். சென்னை அணிக்காக முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். மும்பை தரப்பில் முதல் பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா ரன் குவிப்பார் என நினைத்த வேளையில் 4 பந்துகள் பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.