ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை படைத்த ஜோப்ரா ஆர்ச்சர்
ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.;

Image Courtesy: @rajasthanroyals / @IPL
ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுயடுத்து ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது .
ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 24 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து இஷான் கிஷன் களம் இறங்கினர். டிராவிஸ் ஹெட் - இஷான் கிஷன் இணை அதிரடியாக ஆடியது. இந்த இணை ராஜஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் டிராவிஸ் ஹெட் 67 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ்குமார் ரெட்டி 30 ரன், ஹென்றிச் க்ளாசென் 34 ரன், அனிகெட் வர்மா 7 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் ஐதரபாத் அணி 20 ஓவகளில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் இஷான் கிஷன் 106 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ஆட உள்ளது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஜோப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.
ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:
ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0
மொஹித் சர்மா: 4-073-0
பாசில் தம்பி: 4-0-70-0
யாஷ் தயால்: 4-0-69-0