மக்களவை தேர்தல் - கவனிக்க வைத்த 3 வெற்றிகள்
*காலிஸ்தான் அபிமானியான அம்ரித் பால் சிங், அசாம் மாநிலத்தில் சிறையில் இருக்கும் நிலையில் பஞ்சாபின் காதோர் சாஹிப் தொகுதியில் வெற்றியின் விளிம்பில் உள்ளார்
* UAPA வழக்கில் 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் எஞ்சினியர் ரஷீத், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக வெற்றி
* இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங், பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சையாக வெற்றி முகத்தில் உள்ளார்
கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு பேசியதாகத் தகவல். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆட்சி அமைக்கிறது பாஜக?
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் தென்பட்டாலும் கூட்டணி ஆட்சியையே அமைக்க முடியும் என்ற நிலை உருவாகும் எனத் தெரிகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பா.ஜனதா மட்டும் தனியாக 441 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 237 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 285 இடங்களில் போட்டியிட்டு 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்.
நண்பகல் 12 மணி முன்னிலை நிலவரம்:
பாஜக: 243
காங்கிரஸ்: 94
சமாஜ்வாடி: 33
திரிணாமூல் காங்கிரஸ்: 30
திமுக: 21
தெலுங்கு தேசம்:16
ஐக்கிய ஜனதா தளம்: 15
சிவசேனா (உத்தவ்): 10
தேசிய வாத காங்கிரஸ்: 8
சிவசேனா (ஷிண்டே): 6
லோக்ஜனசக்தி: 5
ராஷ்ட்ரிய ஜனதா தளம்: 4
ஆம் ஆத்மி: 4
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: 4
அதிமுக: 1