மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

Update:2024-06-04 00:38 IST
Live Updates - Page 3
2024-06-04 06:23 GMT

அண்டை மாநிலமான கேரளாவின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வருகின்றன. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியான யுடிஎஃப் கூட்டணி 17 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 2 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி முன்னிலையில் உள்ளார். சுரேஷ் கோபி 206378 வாக்குகளுடன் முன்னிலை உள்ளார். இவருக்கு அடுத்ததாக கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில்குமார் 168612 வாக்குகள் பெற்றுள்ளார். 

2024-06-04 06:08 GMT

தற்போதைய பிரதமர் (முன்னாள் பிரதமர்) ஆகப் போகிறார் என்பதை இந்தப் போக்குகள் காட்டுகின்றன” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவை சந்தித்ததை சுட்டிக்காட்டும் விதமாக இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

2024-06-04 05:51 GMT

சுல்தான்பூரில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி பின்னடவை சந்தித்துள்ளார். அதேபோல அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி பின் தங்கியுள்ளார். 

2024-06-04 05:12 GMT

இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கிய நடிகை கங்கனா ரணாவத் 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றதையடுத்து தனது வீட்டில் உள்ள பூஜை அறையில் கங்கனா ரணாவத் வழிபாடு மேற்கொண்டார். 



2024-06-04 05:08 GMT



2024-06-04 05:07 GMT

மேற்கு வங்காளத்தில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. காலை 10.15 மணி நிலவரப்படி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 16 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன.

2024-06-04 05:05 GMT

கேரளாவில் திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

2024-06-04 04:56 GMT

காலை 10 மணி நிலவரம்

தேசிய ஜனநாயக கூட்டணி: 285

இந்தியா கூட்டணி: 227

பிற கட்சிகள் 29

2024-06-04 04:17 GMT

தற்போதைய நிலவரப்படி முன்னிலை நிலவரம் தெரிய வந்த 525 தொகுதிகளில் பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 216 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

2024-06-04 04:10 GMT

அமேதி தொகுதியில் ஸ்மிரிதி ராணி முன்னிலை பெற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்