தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் சசிதரூர் பின்னடைவு. பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 09:00 மணி முன்னிலை நிலவரம்
✦ தேசிய ஜனநாயக கூட்டணி - 260
✦ இந்தியா கூட்டணி - 177
✦ பிற கட்சிகள் - 16
மேற்கு வங்காளத்தில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முன்னிலை நிலவரம் தெரிய வந்த 437 தொகுதிகளில் பாஜக கூட்டணி 256 இடங்களிலும் இந்தியா கூட்டணி 164 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பிற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலை
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல், காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா முன்னிலையில் உள்ளார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 169 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 93 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப கட்ட நிலவரப்படி இந்தியா கூட்டணி 31 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பிற கட்சிகள் 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.