மத்தியில் அமைகிறது பா.ஜ.க. கூட்டணி ஆட்சி

பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டியை கடந்தது.

Update: 2024-06-03 19:08 GMT

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் என்பது மிகப்பெரிய திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது.

Live Updates
2024-06-04 17:54 GMT

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 10 மாநிலங்கள் அபார வெற்றியை கொடுத்துள்ளன.

2024-06-04 16:38 GMT

30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கே சிலர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

2024-06-04 15:11 GMT

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்:  பிரதமர் மோடி

2024-06-04 13:54 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 5,54,289 வாக்குகளைப் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். 

2024-06-04 13:15 GMT

ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2024-06-04 12:42 GMT

எங்களது வியூகத்தை இப்போது கூறிவிட்டால் மோடி உஷாராகிவிடுவார்: பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை அழைப்பது குறித்து நாளை முடிவு: மல்லிகார்ஜுன கார்கே

2024-06-04 12:24 GMT

மக்கள் தீர்ப்பை மனதார ஏற்கிறோம்: ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி; வேலை வாய்ப்பு இன்மை, பண வீக்கம் பற்றி மக்களிடம் கொண்டு சென்றோம்- மல்லிகார்ஜுன கார்கே

2024-06-04 11:50 GMT

 மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏப்ரல் 19, 26 என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வன்முறைகள் ஏற்பட்டதால் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.2 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்ட அதேவேளையில், உள் மணிப்பூர் தொகுதியில் மட்டும் பாஜக போட்டியிட்டது. வெளி மணிப்பூர் தொகுதியில் நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் திமோத்திக்கு பாஜக ஆதரவு அளித்தது

இந்தநிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிமுகத்தில் உள்ளது. உள் மணிப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அங்கொம்ச்சா பிமோல் பாஜக வேட்பாளரை விட 105436 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார். வெளி மணிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆல்பிரட் கங்கம் 72019 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.

2024-06-04 11:38 GMT

ராமநாதபுரம் தொகுதியில்  முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தோல்வி

Tags:    

மேலும் செய்திகள்