ஆட்சி அமைக்கிறது பாஜக?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் தென்பட்டாலும் கூட்டணி ஆட்சியையே அமைக்க முடியும் என்ற நிலை உருவாகும் எனத் தெரிகிறது.

 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பா.ஜனதா மட்டும் தனியாக 441 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 237 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 285 இடங்களில் போட்டியிட்டு 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

Update: 2024-06-04 08:59 GMT

Linked news