கோவில்களில் இவையெல்லாம் வேண்டாமே!
வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்திவிட்டு கோவிலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வது, ஆலயம் செல்வது கூடாது.
* கால்களை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.
* போதைப்பொருள் உட்கொண்டபடி அல்லது மது போதையில் சென்று தரிசனம் செய்யக்கூடாது
* கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது.
* மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
* கோவிலில் உள்ள திருவிளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.
* சிவன் கோவில்களில் சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களை தாண்டுதல், மிதித்தல் கூடாது.
* கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.
* வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்குச் செல்லக்கூடாது.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional