தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 'ரெட் அலர்ட்' - இன்று பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கடலூர்,
மயிலாடுதுறை,
நாகை,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
அரியலூர்,
நாளை 6 மாவட்டங்களில் அதி கனமழை ( ரெட் அலர்ட்)
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
மயிலாடுதுறை,
கடலூர்,
நாகை,
திருவாரூர்
5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்)
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
அரியலூர்,
தஞ்சாவூர்
நாளை 6 மாவட்டங்களில் கனமழை
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
பெரம்பலூர்,
திருச்சி,
புதுக்கோட்டை,
சிவகங்கை
நாளை மறுநாள் 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
சென்னை,
திருவள்ளூர்,
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி,
கடலூர்
நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் மிக கனமழை
ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை,
பெரம்பலூர்,
அரியலூர்,
காவிரி படுகைகள்
நாளை மறுநாள் 9 மாவட்டங்களில் கனமழை
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி,
கோவை,
திருப்பூர்,
திண்டுக்கல்,
ஈரோடு,
சேலம்,
நாமக்கல்,
கரூர்,
தேனி,
மதுரை,
கிருஷ்ணகிரி,
தருமபுரி.
டிசம்பர் 2-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி,
கோவை,
திருப்பூர்,
தேனி,
திண்டுக்கல்,
ஈரோடு
நாகையில் மீண்டும் தொடங்கிய கனமழை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்படி நாகூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழை நேற்றிரவில் இருந்து குறைந்திருந்தநிலையில் தற்போது மீண்டும் கனமழை கொட்ட தொடங்கி உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளநிலையில் தற்போது நாகையில் கனமழை பெய்து வருகிறது.
தற்போதைய நிலைவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகும் பெங்கல் புயல்: நகர மறுக்கும் தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மீண்டும் நகராமல் அதே இடத்தில் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மணி நேரங்களாக மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர தொடங்கி இருந்தநிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைவரப்படி, சென்னைக்கு தென் கிழக்கே 480 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழை பெய்யும் என்றும், பகலில் குளிர்ந்த காற்று வீசும் என்றும், இந்த கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை (நவ., 29) மற்றும் நாளை மறுநாள் (நவ., 30) சென்னை, கடலூர், விழுப்புரம், கடலோரப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புயல் சின்னம் எதிரொலி: பாம்பனில் 3வது நாளாக கடல் சீற்றம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி ராமநாதபுரத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதுடன் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்தது. குடியிருப்பு வாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்தனர். சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் பாம்பனில் 3வது நாளாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மண்டபம்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை
கடலூர்,
மயிலாடுதுறை,
நாகப்பட்டினம்,
புதுக்கோட்டை,
தஞ்சாவூர்
திருவாரூர்.
லேசான மழை
செங்கல்பட்டு,
விழுப்புரம்,
சென்னை,
காஞ்சிபுரம்.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வரும் 30ம் தேதி ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் (21 செ.மீ) ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று மாலை முதல் நாளை காலை வரை தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 85 கி.மீ. காற்றின் வேகம் கொண்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறி இருக்கிறது.
இந்த புயலானது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 30-ம் தேதி காலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எதிரொலி: இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும் என கணிப்பு
வங்கக் கடலில் புயல் உருவாவது மேலும் தாமதமாகி உள்ளது. இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே இந்த புயல் வலுஇழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு முதல் மழை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நாளை மறுநாள் நாகை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக உள்ளநிலையில் சென்னை மற்றும் நாகையில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம்: புதுச்சேரி, நாகையில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
புதுச்சேரி
வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனிடையே புதுச்சேரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது என்று அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தி உள்ளார். காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அத்துமீறி கடற்கரைக்கு செல்வோரை எச்சரித்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்
நாகையில் நம்பியார் நகர் உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடற்கரைப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் மக்கள் கடற்கரையில் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவாக உள்ள பெங்கல் புயல்: தயார்நிலையில் இந்திய கடற்படை
பெங்கல் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கையை செய்ய தயார்நிலையில் உள்ளதாகவும், பாதிக்கப்படும் பகுதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகி வருவதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி மாநில அரசு மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப்பணிகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாகவும், உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளநிவாரண குழுக்கள், டைவிங் குழுக்கள் உள்ளிட்டவையும் தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.