நாகையில் மீண்டும் தொடங்கிய கனமழை நாகப்பட்டினம்... ... தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - இன்று பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு
நாகையில் மீண்டும் தொடங்கிய கனமழை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதன்படி நாகூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழை நேற்றிரவில் இருந்து குறைந்திருந்தநிலையில் தற்போது மீண்டும் கனமழை கொட்ட தொடங்கி உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளநிலையில் தற்போது நாகையில் கனமழை பெய்து வருகிறது.
தற்போதைய நிலைவரப்படி, நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-28 07:30 GMT