தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2024-11-27 14:00 IST

சென்னை,

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30 மணிக்கு பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. பெங்கல் புயலாக மாறியபின் நாளை தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கக்கடலில் உருவாக உள்ள'பெங்கல் புயல்' சென்னையை நெருங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்காக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்