புயல் எதிரொலி: இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்... ... தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' - இன்று பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு
புயல் எதிரொலி: இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும் என கணிப்பு
வங்கக் கடலில் புயல் உருவாவது மேலும் தாமதமாகி உள்ளது. இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே இந்த புயல் வலுஇழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு முதல் மழை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் நாளை மறுநாள் நாகை, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக உள்ளநிலையில் சென்னை மற்றும் நாகையில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.