வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.;
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிகவும் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் அடுத்த 12 மணிநேரத்தில் புயல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை, புயல் எச்சரிக்கை: சென்னயில் உதவி எண்கள் அறிவிப்பு
கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கனமழை, புயல் தொடர்பான அவசர உதவிக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
திருவல்லிக்கேணி - 6381081493, 9498100042, 9498108089
கீழ்பாக்கம் - 7824867234, 9498103184, 8668050028
மயிலாப்பூர் - 9498143862, 9940064050, 9003234656
அடையாறு - 8667357501, 9840709921, 9898140144, 7010470498, 9443560480
பரங்கிமலை - 6382256055, 9498131259, 9094152710, 9840975591, 7010177676
தியாகராயநகர் - 7858188376, 9841692597, 8148263988
பூக்கடை - 9043442929, 9498142104, 9962542866
விழுப்புரம்: தரைப்பாலம் மூழ்கியதால் மக்கள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளபெருக்கால் காணிமேடு, மண்டகப்பட்டு இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக கந்தாடு, மரக்காணம், மண்டகப்பட்டு, அகரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
புயல் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்
பெங்கல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் கடற்கரை சாலை மூடப்பட்டது. கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டன. புதுச்சேரியில் உள்ள கடலில் மக்கள் இறங்க வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டிருந்த நிலையில் சிலர் கடலில் இறங்கி செல்பி எடுத்தும், குளித்தும் விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: சென்னையில் 39 இடங்களில் கட்டுப்பாட்டு அறை
சென்னையில் 39 இடங்களில் சிறு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறையில் தகவல்பெற்று பொதுமக்களுக்கு உதவ காவல் துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.
நாகை தொகுதி அம்பல் ஊராட்சியில், கனமழை பாதிப்பால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ்.
திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சீர்காழி அருகே கடலோரத்தில் உள்ள 1,200 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சிதம்பரத்தை அடுத்த புதுப்பேட்டையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 5 மீட்டர் தூரத்திற்கு கடல் அலைகள் எழும்புகின்றது.
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் கடல் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் படகுகளை பத்திரமாக கரையில் நிறுத்தும் பனியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 40 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியுள்ளதால் கடற்கரை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது.