லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
முன்களப்பணியாளர்களுடன் தேநீர் அருந்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் புளியந்தோப்பு பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், அருகில் இருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார்.
வடகிழக்கு பருவமழையால் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராயபுரம் மண்டலம் வார்டு 56 பிரகாசம் சாலை பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் மூலம் அகற்றும் காட்சி
கொட்டும் மழையில் பேசின் பாலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கொட்டும் மழையில் பேசின் பாலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மழை நீரை அகற்றும் பணிகள், மழை பாதிப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
சென்னைக்கு ரெட் அலர்ட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மெட்ரோ ரெயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கவில்லை' - நிர்வாகம் விளக்கம்
வலுவடைந்த வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.