காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் தாழ்வு மண்டலம், தாழ்வுப் பகுதியாக வலு இழந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் (புதன்கிழமை) தமிழக பகுதிகளை நோக்கி நகருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழைக்கான வாய்ப்பு புதன்கிழமைக்கு பிறகு இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாத இறுதியில் அடுத்த நிகழ்வினால் மழை கிடைக்கவும் சாதகமான சூழல் நிலவுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் 25ம் தேதி வரை தமிழ்நாட்டின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.