இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (12.12.2024)

Update:2024-12-12 09:04 IST
Live Updates - Page 3
2024-12-12 09:17 GMT

'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. 


2024-12-12 09:16 GMT

தொடர் மழை: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


2024-12-12 07:13 GMT

பெரியாரின் வைக்கம் போராட்டம் மிக முக்கியமானது என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம்!"- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

2024-12-12 06:18 GMT

பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2024-12-12 06:10 GMT

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால்,  மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

2024-12-12 05:21 GMT

வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்