கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார்.;

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.