ஜம்மு: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி
ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இருந்து பயணிகளை ஏற்றி சென்ற பஸ் ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ஜம்முவின் அக்னூர் பகுதியில் சென்ற போது திடீரென பஸ் அங்குள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.