பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விவரம்
மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல பாதுகாப்புத்துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்
- பாதுகாப்பு - ₹4.54 லட்சம் கோடி
- ஊரக வளர்ச்சி - ₹2.65 லட்சம் கோடி
- வேளாண் - ₹1.51 லட்சம் கோடி
- உள்துறை - ₹1.50 லட்சம் கோடி
- கல்வி - ₹1.25 லட்சம் கோடி
- ஐ.டி., டெலிகாம் - ₹1.16 லட்சம் கோடி
- சுகாதாரம் - ₹89,287 கோடி
- எரிசக்தி - ₹ 68,769 கோடி
- சமூக நலன் - ₹56,501 கோடி
- வணிகம், தொழில் - ₹47,559 கோடி