புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்; வருகிற 15-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வரும் 15-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Update: 2024-08-07 21:27 GMT

Image Courtesy : @isro

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வரும் 15-ந்தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறிய ரக செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை எதிர்காலத்தில் மற்ற செயற்கைக்கோள்களுக்கு பயன்படுத்துவதே இ.ஒ.எஸ்.-08 செயற்கைக்கோளின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், எலெக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு (GNSS-R) மற்றும் சிக் யுவி டோசிமீட்டர்(SiC UV Dosimeter) ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இதில் உள்ள இஒஐஆர் கருவி பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் இரவில் துல்லியமான படம் எடுக்க உதவிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்