சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு

Update: 2024-11-20 00:20 GMT
Live Updates - Page 3
2024-11-20 06:38 GMT

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தானே பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்-மந்திரியும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன்பின்னர் அவர் கூறுகையில், இன்று ஜனநாயகத்தின் திருவிழா, அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும், இது மராட்டிய ஜனநாயகத்தை வலுப்படுத்தும். 2019ல் நடந்ததை மக்கள் மறக்கவில்லை. மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

2024-11-20 06:31 GMT

11 மணி நிலவரம்:-

மராட்டியத்தில் 11 மணி நிலவரப்படி 18.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் இதுவரை 15.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மராட்டியத்தில் ஆரம்பத்தில் இருந்தே வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது.

அதைபோல ஜார்கண்ட் மாநிலத்​தில் சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கு காலை 11 மணி நேர நிலவரப்படி 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-11-20 05:28 GMT

தேவேந்திர பட்னாவிஸ் வாக்களிப்பு

மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் தாயார் சரிதா பட்னாவிஸ் ஆகியோர் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

2024-11-20 05:25 GMT

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் நல்ல ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தேர்தலில் 60 சதவீதம் வாக்குப்பதிவு இருக்கும் என்று நான் நம்புகிறேன். வடக்கு மும்பையில் உள்ள 6 இடங்களிலும் மகாயுதி கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

2024-11-20 05:13 GMT

மராட்டிய சட்டசபை தேர்தல்: மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் வாக்களித்தார்.

2024-11-20 05:09 GMT

நடிகை ஜெனிலியா வாக்களித்தார்

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், லத்தூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகை ஜெனிலியா டிசோசா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்.

2024-11-20 04:26 GMT

சட்டசபை தேர்தல்: 9 மணி நிலவரப்படி வாக்கு சதவீத விவரம்:-

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி மராட்டிய மாநிலத்தில் 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைபோல ஜார்கண்ட் 2-ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-11-20 04:14 GMT

சரத்பவார் வாக்களித்தார்

மராட்டியத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத்பவார் பாரமதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

2024-11-20 03:12 GMT

சச்சின் டெண்டுல்கர் வாக்களித்தார்

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

2024-11-20 02:35 GMT

மும்பை ராஜ்பவனில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்