மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தானே பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்-மந்திரியும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன்பின்னர் அவர் கூறுகையில், இன்று ஜனநாயகத்தின் திருவிழா, அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும், இது மராட்டிய ஜனநாயகத்தை வலுப்படுத்தும். 2019ல் நடந்ததை மக்கள் மறக்கவில்லை. மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

Update: 2024-11-20 06:38 GMT

Linked news