சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி - தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு

படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-11-20 20:25 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 2-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்