மத்திய பல்கலைக்கழகங்களில் என்னென்ன படிப்புகள் உள்ளன? நுழைவுத்தேர்வு எப்படி? - முழு விபரம்
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.;
இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் மத்திய பல்கலைக் கழகங்களில் (CENTRAL UNIVERSITIES) பட்டப் படிப்பில் சேர நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வின் பெயர் --"காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்". (COMMON UNIVERSITY ENTRANCE EXAMINATION) ( CUET) ஆகும். இதனை நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ( NATIONAL TESTING AGENCY) என்னும் அமைப்பு நடத்துகிறது
இந்திய அளவில் நடைபெறும் தேர்வு என்பதால், ஆங்கிலம் ,இந்தி, அசாமி, பெங்காலி குஜராத்தி, கன்னடா, மலையாளம், மராத்தி ,ஒடியா ,பஞ்சாபி, தமிழ் ,தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அசாம் பல்கலைக்கழகம், பாபா ஷாகிப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகம், தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகம், குஜராத் மத்திய பல்கலைக்கழகம், ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், இமாசலப் பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம், கேரளா மத்திய பல்கலைக்கழகம், ஒரிசா மத்திய பல்கலைக்கழகம், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், டாக்டர் ஹரிசின் குவார் விஷ்வா வித்தியாலயா, குரு காசிதாஸ் விஸ்வ வித்யாலயா, ஹேமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய ஆதி திராவிட பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கு இந்த நுழைவு தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும்.
வரும் 2025 -2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பொதுவாக, இந்த பல்கலைக்கழகங்களில் சேர நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு பற்றிய அனுமதி அட்டை ஏப்ரல் மாதம் வழங்கப்படும். மே மாதம் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
எனவே, அடுத்த கல்வி ஆண்டில் (2025-2026) இந்தப் பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் இப்போதே இந்த நுழைவுத் தேர்வு பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.
நுழைவுத் தேர்வு கேள்விகள்
இந்த நுழைவுத் தேர்வுக்கான கேள்விகள் கொள் குறி வகை வினா (OBJECTIVE TYPE QUESTIONS) வடிவில் அமையும்.
மொழிப் பாடங்களில் ( LANGUAGE SUBJECT S)-
1. ரீடிங் காம்ப்ரேஷன் (READING COMPREHENSION)
2. லிட்டரரி ஆப்டிடியூட் ( LITERARY APTITUDE)
3.வோகாபலரி (VOCOBALARY)
ஆகிய பிரிவுகளில் கேள்விகள் அமையும்.
முக்கிய பாடங்களில் ( DOMAIN SUBJECTS)
பிளஸ் 2 பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுத்தேர்வாக(GENERAL TEST)--
1.பொது அறிவு (GENERAL KNOWLEDGE)
2.தற்கால நிகழ்வுகள் (CURRENT AFFAIRS)
3.பொது புத்தி கூர்மை திறன்(GENERAL MENTAL ABILITY)
4. எண்கள் திறன் (NUMERICAL ABILITY)
5.குவாண்டிடேட்டிவ் ரீசனிங் ( QUANTITATIVE REASONING)
6. லாஜிக்கல் அண்ட் அனாலிடிக்கல் ரீசனிங் (LOGICAL AND ANANLYTICAL REASONING)-ஆகிய பாடங்களில் இருந்தும் கேள்விகள் இடம் பெறும்.
பொதுவாக ,மொழித் தேர்வு 45 நிமிடங்களும், முக்கிய பாடத் தேர்வு 45 முதல் 60 நிமிடங்கள் வரையும், பொதுத்தேர்வு 60 நிமிடங்களும் நடத்தப்படும்.மொழி தேர்வுக்கு 200 மதிப்பெண்களும் முக்கிய பாடத் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும் பொது தேர்வுக்கு 250 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இணையதள முகவரி: https:/// exams.nta.ac.in/CUET -UG/.
"தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்"
( CENTRAL UNIVERSITY OF TAMIL NADU)
தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில் இயங்குகிறது. இந்த "தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்"( CENTRAL UNIVERSITY OF TAMIL NADU) ஏராளமான பட்டப் படிப்புகளையும் பட்ட மேற்படிப்புகளையும் நடத்தி வருகிறது.
இங்கு நடத்தப்படும் முக்கிய படிப்புகள்.
பட்டப் படிப்புகள்
இன்டகிரேட்டட் யூ.ஜி ப்ரோக்ராம்( 4 ஆண்டுகள் )
(INTRGRATED U.G. PROGRAMMES (4 YEARS).
இங்கு நடத்தப்படும் இன்டகிரேட்டட் டீச்சர் எஜுகேஷன் ப்ரோக்ராம் ( 4ஆண்டுகள் ) பற்றிய விபரம் :
1. இன்டகிரேட்டட் டீச்சர் எஜுகேஷன் ப்ரோக்ராம் (INTEGRATED TEACHER EDUCATION PROGRAMME) (B.Sc.B.Ed)
பட்ட மேற்படிப்புகள்
இண்டகிரேட்டட் பிஜி ப்ரோக்ராம்ஸ் )5 ஆண்டுகள் )
(INTEGRATED P.G. PROGRAMMES)
இங்கு நடத்தப்படும் பி.ஜி ப்ரோக்ராம்ஸ் ( 5 ஆண்டுகள் ) (P.G. PROGRAMMES) பற்றிய விபரங்கள் :
1.இண்டகிரேட்டட் எம் எஸ் சி பயோ டெக்னாலஜி (INTEGRATED M.Sc.BIOTECHNOLOGY)
2. இண்டகிரேட்டட் எம் எஸ் சி கெமிஸ்ட்ரி (INTEGRATED M.Sc. CHEMISTRY)
3.இண்டகிரேட்டட் எம் .ஏ .எக்கனாமிக்ஸ் ( INTEGRATED M.A.ECONOMICS)
4. இண்டகிரேட்டட் எம். எஸ் .சி. கணிதம் ( INTEGRATED M.Sc .MATHEMATICS)
5. இண்டகிரேட்டட் MPA (இசை) ( INTEGRATED MPA (MUSIC)
6.இண்டகிரேட்டட் எம்.எஸ்.சி இயற்பியல்( INTEGRATED M.Sc PHYSICS)
பி.ஜி ப்ரோக்ராம்ஸ் ( 2ஆண்டுகள் )
(P.G. PROGRAMMES)
இங்கு நடத்தப்படும் பி.ஜி ப்ரோக்ராம்ஸ் ( 2ஆண்டுகள் ) (P.G. PROGRAMMES) பற்றிய விபரங்கள் :
1.எம் .எஸ். சி (வேதியியல்) (M .Sc. CHEMISTRY)
2. எம். எஸ். சி .பயோடெக்னாலஜி (M.Sc.BIOTECHNOLOGY)
3. எம்.எஸ்.சி புவியியல் (M.Sc.GEOGRAPHY)
4. எம்.எஸ்.சி ஹார்ட்டிகல்ச்சர் (M.Sc .HORTICULTURE)
5. எம். ஏ. பொருளாதாரம் (M.A.ECONOMICS )
6. மாஸ்டர் ஆப் சோஷியல் வொர்க்( MASTER OF SOCIAL WORK)
7. எம். எஸ். சி அப்ளைட் சைக்காலஜி (M.Sc.APPLIED PSYCHOLOGY)
8. மாஸ்டர் ஆஃப் லைப்ரரி சயின்ஸ் (MASTER OF LIBRARY SCIENCE)
9. எம். எஸ்.சி ஜியாலஜி (M.Sc GEOLOGY)
10. எம்.எஸ்.சி மைக்ரோ பயாலஜி (M.Sc MICRO BIOLOGY)
11. எம் ஏ. ஆங்கிலம் ( M.A.ENGLISH)
12. எம் .ஏ .கிளாசிக்கல் தமிழ் ஸ்டடீஸ் (M.A..CLASSICAL TAMIL STUDIES)
13. மாஸ்டர் ஆப் காமர்ஸ் (MASTER OF COMMERCE)
14. எம்.ஏ மாஸ் கம்யூனிகேஷன்( M .A. MASS COMMUNICATION)
15. எல். எல். எம் கார்ப்பரேட் லா அண்ட் இண்டஸ்ட்ரியல் ஜூரிஸ்ப்ரூடன்ஸ் (L.L.M. CORPORATE LAW AND INDUSTRIAL JURISPRUDENCE)
16. எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (M.Sc COMPUTER SCIENCE)
17. எம் ஏ ஹிந்தி (M.A.HINDI)
18. எம். டெக் மெட்டீரியல் சயின்ஸ் (M.Teh.MATERIAL SCIENCE).
19. மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ( MASTER OF BUSINESS ADMINISTRATION)
20. எம்.எஸ்சி எப்பிடிமையாலஜி அண்ட் பப்ளிக் ஹெல்த் (M.Sc EPIDEMIOLOGY AND PUBLIC HEALTH)
21. எம் .எஸ் சி ஸ்டாடிஸ்டிக்ஸ் அண்ட் அப்ளைடு மேத்தமேடிக்ஸ் (M.Sc.STATISTICS AND APPLIED MATHEMATICS)
22. எம் ஏ. வரலாறு (HISTORY)
பி ஜி டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ் ( ஓராண்டு )
( P.G.DIPLOMA PROGRAMMES -1 YEAR)
இங்கு நடத்தப்படும் பி ஜி டிப்ளமோ ப்ரோக்ராம்ஸ் ( ஓராண்டு ) (P.G.DIPLOMAPROGRAMMES -1 YEAR) பற்றிய விபரங்கள் :
1. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் கெமிக்கல் லேபிட் டெக்னீசியன் (POST GRADUATE DIPLOMA IN CHEMICAL LAB TECHNICIAN)
2. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிட்னஸ் மேனேஜ்மென்ட் (POST GRADUATE DIPLOMA IN FITNESS MANAGEMENT)
3. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டேட் ஆப் சயின்ஸ். (POST GRADUATE DIPLOMA IN DATA SCIENCE)
ஆராய்ச்சி படிப்புகள்
(Ph.D PRIGRAMMES)
இங்கு நடத்தப்படும் ஆராய்ச்சி படிப்புகள் (Ph.D PRIGRAMMES) பற்றிய விபரங்கள் :
1.Ph.D ( CHEMISTRY)
2. Ph.D (BIOTECHNOLOGY)
3. Ph.D (GEOGRAPHY)
4.Ph.D ( HORTICULTURE)
5. Ph.D (ECONOMICS )
6. Ph.D (SOCIAL WORK)
7. Ph.D (APPLIED PSYCHOLOGY)
8. Ph.D (LIBRARY INFORMATION SCIENCE)
9. Ph.D (GEOLOGY)
10. Ph.D (MICRO BIOLOGY)
11. Ph.D(ENGLISH)
12. Ph.D (TAMIL )
13. Ph.D (COMMERCE)
14. Ph.D (MASS COMMUNICATION)
15.Ph.D ( LAW)
16. Ph.D (COMPUTER SCIENCE)
17. Ph.D (HINDI)
18. Ph.D (MATERIAL SCIENCE).
19. Ph.D (MANAGEMENT)
20. Ph.D (EPIDEMIOLOGY AND PUBLIC HEALTH)
21. Ph.D (STATISTICS)
22. Ph.D (HISTORY)
23. Ph.D (APPLIED MATHEMATICS)
24. Ph.D (EDUCATION)
26. Ph.D ( MATHEMATICS)
27. Ph.D (MUSIC)
28. Ph.D (PHYSICAL EDUCATION)
29. Ph.D ( TOURISM AND HOSPITALITY MANAGEMENT)
மேலும் விவரங்களுக்கு
முகவரி:
Central University of Tamil Nadu
Thiruvarur – 610 005
Tamil Nadu, India
Landline : +91-4366-277230 / 277261
இவைதவிர, admissions@cutn.ac.in என்னும் இமெயில் முகவரியிலும் இந்தப்படிப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்