திருச்சியில் உள்ள மத்திய அரசின் பிரபல கல்வி நிறுவனம்!.. என்னென்ன படிப்புகள் உள்ளன? விவரம்

பல்லாயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில்நுட்ப படிப்புகளை படித்து பல்வேறு பணிகளிலும், பதவிகளிலும் சிறப்பிடம் பெற்று திகழ்கிறார்கள்.

Update: 2024-12-23 08:54 GMT

திருச்சி,

"தேசிய தொழில்நுட்பக் கழகம்" என்னும் அமைப்பு இந்திய அளவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகும். இது மத்திய அரசின் நிறுவனம் என்பதால், இந்த நிறுவனத்தை நடத்துவதற்கான அனைத்து நிதியுதவியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது.

வாராங்கல் (Warangal), போபால் (Bhopal), நாக்பர் (Nagpur), துர்காபூர் (Durgapur), ஜாம்ஜெட்பூர் (Jamshedpur), கர்நாடகா (Karnataka), ஸ்ரீநகர் (Srinagar), அலகாபாத் (Allahabad), 5 (Surat), कर्क (Calicut), C (Rourkela), (Jaipur), குருசேத்ரா (Kurukshetra), திருச்சிராப்பள்ளி(Tiruchirappalli), சில்சார் (Silchar), ஹமிர்பூர் (Hamirpur), ஜலந்தர் (Jalandhar), பாட்னா (Patna), ພໍ (Raipur), अ (Agartala), अ (Arunachal Pradesh), L (Delhi), ឈ (Goa), पु (Manipur), மேகலயா (Meghalaya), மிசோரம் (Mizoram), நாகலாந்து (Nagaland), புதுச்சேரி (Puducherry),சிக்கிம் (Sikkim), உத்தரகான்ட் (Uttarakhand), ஆந்திரபிரதேசம் (Andhra Pradesh) ஆகில பல இடங்களில் இந்த தேசிய தொழில்நுட்பக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில்நுட்ப படிப்புகளை படித்து பல்வேறு பணிகளிலும், பதவிகளிலும் சிறப்பிடம் பெற்று திகழ்கிறார்கள்.

தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (NATIONAL INSTITUTE OF TECHNOLOGY TRICHY)

தமிழ்நாட்டில் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சியில் மட்டும் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

1964ஆம் ஆண்டுமுதல் 2003ஆம் ஆண்டுவரை திருச்சியிலுள்ள இந்தக் கல்வி நிறுவனம் மண்டல பொறியியல் கல்லூரி (Regional Engineering College) என அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டு தேசிய தொழில்நுட்பக் கழகம்" (National Institute of Technology) என அழைக்கப்படுகிறது.

இந்தக் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும், டாக்டர் பட்டப்படிப்புகளும் நடத்தப்படுகின்றன. தேசிய அளவில் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்தக் கல்வி நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டப்படிப்புகள் (DEGREE COURSES) இங்கு நடத்தப்படும் பட்டப்படிப்புகள் பற்றிய விவரம்:-

A) பேச்சுலர் ஆஃப் டெக்னாலஜி (Bachelor of Technology) பி.டெக். என அழைக்கப்படும் பேச்சுலர் ஆஃப் டெக்னாலஜி படிப்பில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தப்படிப்புகள் 8 செமஸ்டர்கள் நடத்தப்படும்.

1.கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering)

2.சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)

3.கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Computer Science and Engineering)

4.எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering)

5.எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Communication Engineering)

6.இன்ஸ்ட்ரூமென்டேஷன் அன்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் (Instrumentation and Control Engineering)

7.மெக்கனிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)

8.மெட்டலர்ஜிகல் அன்ட் மெட்டிரியல்ஸ் இன்ஜினியரிங் (Metallurgical and Materials Engineering)

9.புரொடக்ஷன் இன்ஜினியரிங் (Production Engineering)

B) பேச்சுலர் ஆஃப் ஆர்க்கிடெக்சர் (Bachelor of Architecture) பி.ஆர்க். என அழைக்கப்படும் "பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர்' என்னும் கட்டிடகலை சம்பந்தப்பட்ட படிப்பும் இங்கு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்புகள் 10 செமஸ்டர்கள் நடத்தப்படும்.

C) பி.எஸ்.சி. பி.எட். (B. Sc. B. Ed.)

ஒரே நேரத்தில் பி.எஸ்.சி பட்டமும், பி.எட். பட்டமும் சேர்த்து வழங்கும் விதத்தில் இரண்டு பட்டங்களுக்கான (Dual Degree) படிப்பும் இங்கு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பு 8 செமஸ்டர்கள் நடத்தப்படும்.

1.வேதியியல் (Chemistry)

2.கணிதவியல் (Mathematics)

3.இயற்பியல் (Physics)

II.முதுநிலை பட்டப்படிப்புகள் (POST GRADUATE PROGRAMMES)

A.மாஸ்டர் ஆப் டெக்னாலஜி (Master of Technology)

எம்.டெக். என அழைக்கப்படும் மாஸ்டர் ஆப் டெக்னாலஜி என்னும் பட்ட மேற்படிப்பு இங்கு நடத்தப்படுகிறது. இந்தப்படிப்பு 4 செமஸ்டர்கள் நடத்தப்படும். கீழ்க்கண்ட படிப்புகளில் எம்.டெக்.படிப்புகள் நடத்தப்படுகின்றன.

1.எனர்ஜி இன்ஜினியரிங் (Energy Engineering)

2.கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering)

3.பிராசஸ் கண்ட்ரோல் அன்ட் இன்ஸ்ட்டூரூமென்டேஷன் (Process Control and Instrumentation) 4.இண்டஸ்டிரியல் ஆட்டோமேஷன் (Industrial Automation)

5.டிரான்ட்போர்ட்டேஷன் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மெண்ட் (Transportation Engineering and Management)

6.கன்ஸ்டிரக்ஷன் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மெண்ட்(Construction Technology and Management)

7.ஸ்டிரக்சுரல் இன்ஜினியரிங் (Structural Engineering)

8.என்விரோன்மென்டல் இன்ஜினியரிங் (Environmental Engineering)

9.கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Computer Science and Engineering)

10.பவர் எலெக்ட்ரானிக்ஸ் (Power Electronics)

11.பவர் சிஸ்டம்ஸ் (Power Systems)

12.கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் (Communication Systems)

13வி.எல்.எஸ்.ஐ. (VLSI System)

14.இன்டஸ்டிரியல் சேப்டி இன்ஜினியரிங் (Industrial Safety Engineering)

15.தெர்மல் பவர் இன்ஜினியரிங் (Thermal Power Engineering)

16.மெட்டிரியல் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Materials Science and Engineering) 17.இன்டஸ்டிரியல் மெட்டலர்ஜி (Industrial metallurgy)

18.வெல்டிங் இன்ஜினியரிங் (Welding Engineering)

19.இன்டஸ்டிரியல் இன்ஜினியரிங் அன்ட் மேனேஜ்மெண்ட்(Industrial Engineering and Management)

20.மேனுபேக்சரிங் டெக்னாலஜி (Manufacturing Technology)

21.நான் டிஸ்டிரக்டிவ் டெஸ்டிங் (Non-Destructive Testing)

22.டேட்டா அனலிடிக்ஸ் (Data Analytics)

23.ஜியோடெக்னிக்கல் இன்ஜினியரிங் (Geotechnical Engineering)

B.மாஸ்டர் ஆப் ஆர்க்டெக்சர் (Master of Architecture)

எம்.ஆர்க். என அழைக்கப்படும் பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர்" என்னும் கட்டிடகலை சம்பந்தப்பட்ட படிப்பு கீழ்க்கண்ட பாடத்தில் நடத்தப்படுகிறது. 1.எனர்ஜி எபிஸியன்ட் அன்ட் சஸ்டைனபிள் ஆர்க்கிடெக்சர் (Energy Efficient and Sustainable Architecture) இந்தப்படிப்பு 4 செமஸ்டர்கள் நடத்தப்படும்.

C.மாஸ்டர் ஆப் சயின்ஸ் (Master of Science)

"எம்.எஸ்சி.," எனப்படும் "மாஸ்டர் ஆப் சயின்ஸ்" படிப்பு கீழ்க்கண்ட பாடங்களில் நடத்தப்படுகிறது. 1.கணினி அறிவியல் (Computer Science)

2.வேதியியல் (Chemistry)

3.இயற்பியல் (Physics)

4.கணிதவியல் (Mathematics) இந்தப்படிப்பு 4 செமஸ்டர்கள் நடத்தப்படும்.

D.மாஸ்டர் ஆஃப் பிஸினல் அட்மினிஸ்டிரேஷன் (Master of Business Administration)

எம்.பி.ஏ., எனப்படும் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன் என்னும் படிப்பு 6 முப்பருவ கல்வித்திட்டத்தின்கீழ் (Six Trimesters) நடத்தப்படுகிறது.

E.மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (Master of Computer Application)

எம்.சி.ஏ., எனப்படும் மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்னும் படிப்பு 6 செமஸ்டர்கள் நடத்தப்படுகிறது.

F.மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் (Master of Arts)

எம்.ஏ., எனப்படும் முதுகலை பட்டப்படிப்பும் இங்கு நடத்தப்படுகிறது. ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) (English (Language and Literature)) பாடத்தில் மட்டுமே இந்தப்படிப்பு நடத்தப்படுகிறது.

III மாஸ்டர் ஆப் சயின்ஸ் (MASTER OF SCIENCE (BY RESEARCH))

அனைத்து பொறியியல் துறைககளிலும் (All Engineering Departments)மாஸ்டர் ஆப் சயின்ஸ் (ரிசர்ச்) என்னும் பட்டமேற்படிப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

IV. ஆராய்ச்சி படிப்புகள் (DOCTOR OF PHILOSOPHY)

பி.எச்.டி. என்னும் பட்டப்படிப்பான "டாக்டர் ஆப் பிலாசபி(Doctor of Philosophy) கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

1.கெமிக்கல் இன்ஜினியரிங் (Chemical Engineering)

2. சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering)

3.கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (Computer Science and Engineering) 4.எலெக்ட்ரிக்கல் அன்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (Electrical and Electronics Engineering)

5.எலெக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Communication Engineering)

6.இன்ஸ்ட்டூரூமென்டேஷன் அன்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் (Instrumentation and Control Engineering)

7.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical Engineering)

8.மெட்டலர்ஜிகல் அன்ட் மெட்டிரியல் இன்ஜினியரிங்(Metallurgical and Materials Engineering) 9.புரொடக்ஷன் இன்ஜினியரிங் (Production Engineering)

10.ஆர்க்கிடெக்சர் (Architecture)

11.வேதியியல் (Chemistry)

12.கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் (Computer Applications)

13.ஹியூமனிட்டிஸ் (Humanities)

14.எனர்ஜி அன்ட் என்விரோன்மெண்ட் (Energy and Environment)

15.மேனேஜ்மெண்ட் ஸ்டடிஸ் (Management Studies)

16.கணிதவியல் (Mathematics)

17.இயற்பியல் (Physics)

திருச்சியில் இயங்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கீழ்க்கண்ட துறைகள் உள்ளன. அந்தத் துறைகள் பற்றிய விவரங்களை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு தகவல்கள் பெறலாம்.

S.No  DEPARTMENTS PHONE NO.

1. Architecture Phone: +91-431-2503550

2, Centre of Excellence in Corrosion and Surface Engineering (CECASE)

Phone: +91-431-2503600

3. Chemical Engineering Phone: +91-431-2503100

4. Chemistry: Phone: +91-431-2503600

5. Civil Engineering Phone: +91-431-2503150

6. Computer Applications Phone: + (91) (431) 2503731

7. Computer Science and Engineering Tel : 91 431 2501801-815 Extn: 2202

8. Energy and Environment Phone: +91 431 2503301

9.Electrical and Electronics Engineering Phone: +91-431-2503250

10. Electronics and Communication Engineering Phone : +91 431 2503301

11. Humanities Phone: +91-431-2503690

12. Instrumentation and control Engineering Tel: +91-431-2503350

13. Management Studies Phone: +91-431-2503700

14. Mathematics Phone : + (91) (431) 2500281

15. Mechanical Engineering Phone : 91-0431-250 3400

16. Metallurgical and Materials Engineering Tel : +91-431-250 3456(Direct)

+91-431-250 3451

17. Physics Phone: +91-431-2503600

18.Production Engineering Phone: +91-431- 2503501

மாணவர் சேர்க்கை விவரம்:-

திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பி.டெக் மற்றும் பி.ஆர்க். படிப்பில் சேர கண்டிப்பாக ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் மெயின் எக்ஸாம்" (ஜெ.இ.இ.) (Joint Entrance Main Exam) [JEE] தேர்வு எழுத வேண்டியது அவசியமாகும். ஜெ.இ.இ. மெயின் தேர்வு பற்றிய விரிவான விளக்கங்கள் பெற தொடர்புகொள்ள வேண்டிய இணையதள முகவரி : https.//jeemain.nta.nic.in/ மேலும் விவரங்களுக்கு... திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் பற்றிய மேலும் பல தகவல்களைப்பெற தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:-

NATIONAL INSTITUTE OF TECHNOLOGY,

Tiruchirappalli - 620015,

Tamil Nadu, India.

Fax: +91-431-2500133

Website: http://www.nitt.edu



Tags:    

மேலும் செய்திகள்