இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Update: 2024-12-27 02:26 GMT

சென்னை,

இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர், மருந்தாளுனர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு எர்ணாகுளம் தெற்கு ரெயில்நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொச்சி மகாராஜா கல்லூரி மைதானத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 29 மற்றும் பிப்ரவரி 4-ந்தேதிகளில் நடக்கிறது.

பி.எஸ்சி. மருந்தாளுனர் படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தகுதியானவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2004 ஜூலை 3-ந் தேதியில் இருந்து 2008 ஜூலை 3-ந் தேதிக்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணம் ஆகி இருக்கக்கூடாது.

மருந்தாளுனர் பணியிடங்களை பொறுத்தமட்டில் திருமணமாகாதவர்கள் எனில் 2001 ஜூலை 3-ந் தேதியில் இருந்து 2006 ஜூலை 3-ந் தேதி வரையிலும், திருமணமானவர்கள் எனில் 2001 ஜூலை 3-ந் தேதி முதல் 2004 ஜூலை 3-ந் தேதி வரையிலும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்